தமிழக முதலமைச்சராக தினகரன் பதவி ஏற்பார் – தங்கத்தமிழ் செல்வன்

157

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக தினகரன் பதவி ஏற்பார் என, தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த தன்மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத தமிழக அரசு மீதும், தலைமை நீதிபதியை பகிரங்கமாக விமர்சனம் செய்த 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதும், ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். வரும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராக தினகரன் பதவி ஏற்பார் என, தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.