தேர்தலை சந்திக்க பாஜக முழு பலத்துடன் தயாராகிறது – பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன்

418

தமிழகத்தில் வரும் தேர்தலை சந்திக்க பாஜக முழு பலத்துடன் தயாராகி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைப்பதற்கு கால அவகாசம் உள்ளதாக தெரிவித்தார்.