மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உரை..!

205

பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இன்று உரையாற்றினார். அப்போது, நிதித்துறை தனிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். நிர்மலா சீதாராமன் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், இந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்து வருவதாகவும், தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளதென்றும், பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் விமர்சனம் செய்தார். மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியனின் கன்னிப் பேச்சுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.