அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தங்க.தமிழ்ச்செல்வன்

367

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.