மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள் பெண் இனத்தை இழிவுபடுத்துகின்றன – தமிழிசை சவுந்தர்ராஜன்

430

கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள் பெண் இனத்தை இழிவுபடுத்துவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு ரஜினி, கமல் ஆகியோர் அஞ்சலி செலுத்தாததை அரசியலாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் பெண் இனத்தை இழிவுபடுத்திய கவிஞர் மனுஷ்யபுத்திரனை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தினார்.