ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார் : தம்பிதுரை நம்பிக்கை …

410

ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக கூறினார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்று கூறிய தம்பிதுரை, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருக்கும் மதுசூதனன் ஆர்.கே.நகரில் வெற்றி வாகை சூடுவது உறுதி என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.