பாஜகவுடன் திமுக மறைமுகமாக தொடர்பு என குற்றச்சாட்டு..!

475

திமுக மறைமுகமாக பாஜகவுடன் தொடர்பு கொண்டுள்ளதாக மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டினார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என ஸ்டாலின் எந்த இடத்திலும் பேசியதில்லை, இனியும் பேசமாட்டார் என்று தெரிவித்தார். இதற்கு பாஜகவோடு செல்வது என்று தான் அர்த்தம் என்று கூறிய தம்பிதுரை, அதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.