தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

83

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திராவிட கட்சிகளே வெற்றி பெறும் என கூறினார். தமிழகத்தில் ஆட்சியமைக்க பாஜகவினர் ஆசைப்படுவதாக குறிப்பிட்ட தம்பிதுரை, பாஜகவின் ஆசையை மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில்லை எனவும் கூறினார். தமிழக கலாச்சாரம், மொழியை திராவிட கட்சிகளே பாதுகாத்து வருவதாகவும், ஆட்சிக்கு வர வேண்டும் என்பதால் பாஜகவினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.