பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் – தம்பிதுரை

193

பணப்பட்டுவாடவை தடுக்க கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையம் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம் என்றும் தெரிவித்தார். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரமோ எதுவானாலும் தவறு நேர கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.