பல்லாவரம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை | கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

80

பல்லாவரம் நகராட்சியில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் 20 பேர் கொண்ட லட்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென பல்லாவரம் நகராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நகராட்சி ஆய்வாளர் ஜெயந்தியிடம் சோதனை செய்ததில், கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களை லட்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.