தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது உண்மை : நடிகை தமன்னா…!

1100

தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது உண்மை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் முன்னணி நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பல நடிகைகள், தாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டதை வெளிப்படையாக கூறி வந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா, தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது உண்மை என்றார். இது பற்றி மற்ற நடிகைகள் தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தான் நடிக்க வந்து 12 ஆண்டுகளில் அதுபோன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்தது இல்லை என்றார்.