ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று பார்வையிடுகின்றார்.

149

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று பார்வையிடுகின்றார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறை சம்பவங்களால் கடந்த 60 நாட்களுக்கு மேலாக பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி குழு காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அவர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சிங் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். அத்துடன், எல்லைப் பகுதியிலும் ஒரு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களால், இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.