பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்படும் தலித்கள் 450 பேர் புத்த மதத்திற்கு தழுவினர் ..!

534

குஜராத்தில் பசு பாதுகாவலர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினர் உள்பட 450 தலித்துகள் புத்த மதத்தை தழுவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் உனா பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு இறந்த பசுவின் தோலை உரித்ததாக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பசு பாதுகாவலர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த 4 பேரும் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவ முடிவு செய்தனர். நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இவர்களுடன் சேர்த்து ஆதிக்க சாதியினரால் தீண்டாமை கொடுமைக்கு ஆளான 450 தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். தலித்துகளை குஜராத் மாநில பாஜக அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மதம் மாறியவர்கள் தெரிவித்துள்ளனர்.