தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்துநிறுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

235

தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்துநிறுத்த பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் தற்போது நான்கு அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில், தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை என தெரிவித்த அவர், தற்போது சம்பா சாகுபடியும் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார். இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய
தண்ணீரை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்திய முத்தரசன், தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசை நிர்பந்தப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என பொதுவாக உபதேசம் செய்வதை பிரதமர் நிறுத்திவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.