புத்த மதத்தலைவர் தலாய் லாமா அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

199

புத்த மதத்தலைவர் தலாய் லாமா அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப்பிரதேச மாநில அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புத்த மதத்தலைவர் தலாய் லாமா விரைவில் அங்கு செல்ல உள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இருநாடுகளுக்கும் இடையே எல்லைப்பிரச்சனை நீடித்து வரும் நிலையில் தலாய்லாமாவை அருணாச்சலப்பிரதேசத்துக்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவுகளை சீர்குலைக்கும் என்று தெரிவித்துள்ள சீனா, தலாய்லாமாவை அருணாச்சலப்பிரதேசத்துக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இருநாட்டு எல்லைப்பிரச்சனை குறித்து நன்றாக தெரிந்தும் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.