தஞ்சை பெரிய கோயிலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

371

தஞ்சை பெரிய கோயிலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு, சக்திவாய்ந்த வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் தஞ்சை காவல் கண்காணிப்பாளரை தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு செயல் இழக்கச்செய்யும் படை வல்லூனர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று பெரியகோயில் முழுவதும் 2 மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் வெடிகுண்டு எதும் கிடைக்காததால் காவல்துறையினர் நிம்மதி பெருமுச்சு விட்டனர்.இதையடுத்து கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினரை தேடிவருகின்றனர்.