தைவானில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

186

தைவானில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தலைநகர் தைபே அருகே 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி பயணிகள் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.