தைப்பூசத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

260

தைப்பூசத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முருக‌ பெருமானின் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசம் நடைபெறுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மதுரை – பழனி இடையேயான சிறப்பு ரயில் வரும் 8 மற்றும்
9ம் தேதிகளில் காலை 6 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, 8.30 மணிக்கு பழனி சென்றடையும் என்றும், அதே ரயில்கள் மறுமார்க்கத்தில் பழனியில் நன்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, 2.30 மணிக்கு மதுரை வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதே போல 8 மற்றும 9ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில், மதுரையில் புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு பழனி சென்றடையும் என்றும், அதே ரயில்கள் மறுமார்க்கத்தில் இரவு 8 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு மதுரை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.