தாய்லாந்தில் ஆமை ஒன்றின் வயிற்றிலிருந்து, சுமார் 915 நாணயங்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன.

255

தாய்லாந்தில் ஆமை ஒன்றின் வயிற்றிலிருந்து, சுமார் 915 நாணயங்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன.

தாய்லாந்தில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில், ஓம்சின் பிக்கி
என்ற 25 வயது பெண் ஆமை இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த ஆமை தண்ணீரில் நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தது. இதை கண்ட மருத்துவர்கள், ஸ்கேன் மூலம் ஆமையை முழுவதுமாக பரிசோதித்தனர். இந்த சோதனையில் ஆமையின் வயிற்றில் 5 கிலோ எடையுடைய உலோகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், ஆமையின் வயிற்றில் இருந்த 915 நாணயங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.