தாய்லாந்தில் கடலுக்குள் உள்ள தீவில் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு மரண தண்டனை விதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சாட் எல்வர்டோஸ்கி, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த் சுப்ரானே தெப்பெட் என்பவரை காதலித்து வந்தார். கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தின் புக்கட் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். loversஇந்த வீட்டைத் தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புக்கட் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சுற்றுச்சூழல் விதிகளை மீறித் தீவில் வீடு கட்டப்பட்டுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.