தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டுகள் சிறை!

486

தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ராவுக்கு ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ரா தனது ஆட்சியின் போது அறிமுகப் படுத்திய திட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஏற்பட்ட கிளர்ச்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஷினவத்ரா நாட்டை விட்டு தப்பியோடினார்.
இந்த வழக்கின் விசாரணை அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் நடைபெற்றது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ஷினவத்ராவுக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.