5 மாவட்டங்களில் 9 குவாரிகளில் பொக்லைன் மூலம் மணல் அள்ள தடை !

239

திருச்சி, கரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 9 மணல் குவாரிகளில், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அரசு மணல் குவாரிகளில் மனிதர்களை கொண்டு தான் மணல் அள்ளப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால், இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் அமைப்பின் அனுமதியை மீறி மணல் குவாரிகளில் இயந்திரங்களை பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 9 மணல் குவாரிகளில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு மணல் அள்ளுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.