தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின

194

தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அவ்வையார் கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வில்சன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ மளமளவென செங்கல் சூளை முழுவதும் பரவியதால் உள்ளே வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள், மற்றும் ஊழியர்களுக்கு வைக்கப்பட்டிருந்த ரூ1 லட்சம் ரொக்கமும் தீயில் கருகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீவிபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்