அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த நவம்பா் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!

533

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த நவம்பா் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், அங்கீகரிக்கப்படாத மனைகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ 20 ஆம் தேதி நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டிற்கு முன்னா் பதிவு செய்யப்பட்டிருப்பின், அவை வரன் முறைப்படுத்தவதற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த நவம்பா் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவகத்தில் ஆவணங்கள், வரைபடத்தோடு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.