தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர்.

180

தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர்.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது. நேந்று நடைபெற்ற முதல் தகுதி தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஆயிரத்து 265 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகின்றனர். சென்னையில் மட்டும் 88 மையங்களில் நடைபெறும் தேர்வில் கர்ப்பணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.