டெஸ்ட் தொடரில் இலங்கை அணி படுதோல்வி அறிக்கை தாக்கல் செய்ய இலங்கை விளையாட்டு அமைச்சகம் உத்தரவு!

428

இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது குறித்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை முன்னாள் கேப்டன் ரணதுங்கா கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில், அந்நாட்டு விளையட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா டெஸ்ட் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கிரிக்கெட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது தொடர்பாக வீரர்களுடன் விரைவில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.