இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன்களில் சுருண்டது.

286

இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், மேற்கிந்திய தீவுகள் அணி 196 ரன்களில் சுருண்டது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராத் வெயிட், சந்திரிகா, டேரன் பிராவோ ஆகியோர் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால், முதல் இன்னிங்சின் முடிவில் 52 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி, 196 ரன்களில் சுருண்டது.இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்களையும், இஷாந்த், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.