டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரை சதம் அடித்து இந்திய வீரர் ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.

513

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரை சதம் அடித்து இந்திய வீரர் ராகுல் புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கியுள்ள இந்திய வீரர்கள் ஷிகர்தவான், ராகுல் ஆகியோர் அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ராகுல் தொடர்ந்து 7 டெஸ்ட் ஆட்டங்களில் அரை சதம் அடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரிஸ் ரோஜர்ஸின் சாதனையை சமன் செய்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.