கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனை..!

683

கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை ரஷ்யா நடத்தியது. இதனால், அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகிய இருவரும் கடந்த 16ம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தநிலையில், ரஷ்யா ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகனை எதிரிகளின் தடைகளை கண்டறிந்து, துள்ளியமாக இலக்கை தாக்கும் திறனுடையது. இந்த சோதனை நடத்தப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அணு ஆயுத பிரச்சினை தீர்ந்த நிலையில், ரஷ்யாவின் ஏவுகணை சோதனை மீண்டும் அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.