தலீபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கனடா தம்பதியினர் மீட்பு!

276

தலீபான் தீவிரவாதிகள் 5 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட கனடா நாட்டு தம்பதியினரை அமெரிக்க ராணுவத்தினர் மீட்டனர்.
வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஜோஷுவா பாய்லீ தனது மனைவி மற்றும் குழந்தையுடன், ஆப்கானிஸ்தானுக்கு 2014-ம் ஆண்டு சென்றிருந்தார். அங்கு தலிபான் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி செய்து வந்தார். இதையடுத்து ஆத்திரமடைந்த தீவிரவாதிகள், ஜோஷுவா குடும்பத்தினரை கடத்தி சென்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் வைக்கப்பட்டிருந்த ஜோஷுவா குடும்பத்தை அமெரிக்கா ராணுவத்தினர் மீட்டனர். தலீபான் தீவிரவாதிகள் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது குழந்தையையும் கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.