காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

197

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படனர்.

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புனித ரமலான் மாதத்தையொட்டி மத்திய அரசு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17–ஆம் தேதி நிறுத்தி வைத்தது. ரம்ஜான் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்பு படைகள் மீண்டும் தொடங்கி இருக்கின்றன.
பந்திபோரா பகுதியில், நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.