காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு | ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை .

114

காஷ்மீரில் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு கொன்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென அப்பகுதியில் 2 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை கண்ட இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன் மூலம், இந்திய பகுதிக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் காஷ்மீரின் பன்டிப்போரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவனை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.