டெல்லியில் வெளிநாட்டவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் !

249

தலைநகர் டெல்லியில் வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியின் மையப் பகுதியில் ஹவுஜ்காஷ் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்தில் உணவு விடுதிகளும், மதுபான விடுதிகளும் அதிகம் காணப்படுவதால் இங்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் கூடும் பகுதியாகக் காணப்படுகிறது. இந்தப் பகுதியைக் குறி வைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்புக் காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.