இரட்டை இலை சின்னத்தின் சக்தியை நிரூபித்துக்காட்டுவோம்-முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி!

2571

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தின் சக்தியை நிரூபித்துக்காட்டுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தானில் அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கச்சத்தீவு பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தின் சக்தியை நிரூபித்துக்காட்டுவோம் என்றும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒற்றுமையாக செயல்பட்டது போல இனி எந்த தேர்தல் வந்தாலும் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும் என உருக்கமாக கூறினார்.