ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம்..!

464

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் இறுதி போட்டியில் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் ரபெல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாசுடன் மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து ரபெல் நடால் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 6 க்கு 2 என எளிதில் கைப்பற்றினார்.

இதையடுத்து, இரண்டாவது சுற்றில் சிட்சிபாஸ், நடாலுக்கு கடும் சவாலாக இருந்தார். ஆனாலும் நடால் 7 க்கு 6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியில், 6 க்கு 2, 7 க்கு 6 என்ற கணக்கில் வென்று ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் நடால் பெறும் ஐந்தாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.