5-வது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றிய ஜோகோவிச்…!

213

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரருடன், நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார். இதில் நான்கு செட்களில் தலா இரண்டில் வெற்றி இருவரும் சமநிலை பெற்றனர். இதனையடுத்து, சாம்பியனை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினர். இறுதியில் 5 மணி நேரம் நடைபெற்ற போட்டியில், 7க்கு6, 6க்கு1, 7க்கு6, 4க்கு6, 13க்கு12 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். இதனால் 5-வது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றி அவர் அசத்தியுள்ளார்.