பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹலேப் வெற்றி..!

243

பிரெஞ்சு ஓபன் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹலெப் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹலேப், அமெரிக்க ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதினர். முதல் அரையிறுதியில் சிமோனோ ஹலேப், 6 க்கு 1, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் முகுருஸாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க நாட்டு வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்-மடிசன் கீய்ஸ் ஆகியோர் மோதினர். இதில் 6க்கு 4, 6 க்கு 4 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி பெற்றார். இந்த நிலையில், 3-வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சிமோனா ஹலெப் 3 க்கு 6, 6 க்கு 4, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.