இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு தென் கொரியாவின் சங் ஹெயான் முன்னேறியுள்ளார்..!

264

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு தென் கொரியாவின் சங் ஹெயான் முன்னேறியுள்ளார்.அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் தென் கொரியாவின் சங் ஹெயானும், உருகுவேயின் பாப்லோ கெவாசும் மோதினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெயான், 6க்கு 1, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள ஹெயான், உலகின் முதல்நிலை வீரரான ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடுகிறார்.