சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

174

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஏ.டிபி. டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. விம்பிள்டன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சர்வதேச தரவரிசையில், ரோஜர் பெடரர் 6 ஆயிரத்து 545 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி, 3-வது இடம் பிடித்துள்ளார். 3-வது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
7 ஆயிரத்து 750 புள்ளிகளுடன் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், 7 ஆயிரத்து 465 புள்ளிகளுடன் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.