கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று, வரலாற்று சாதனை படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்…?

109

ஆஸ்திரேலியாவில் கிராண்ட் சிலாம் பட்டத்திற்கான டென்னில் போட்டி இன்று தொடங்குகிறது. செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. செர்வியா வீரர் ஜோகோவிச், ரபேல் நடால், ரோஜர் பெடரர், அலெக்சாண்டர், சுவரேவ் சிலிச், கெவின் ஆண்டர்சன், டொமினிக் தியெம், நிஷிகோரி உள்ளிட் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்று விளையாட உள்ளனர். பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகியோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர். பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார்.

குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இந்தப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.