ஏடிபி டென்னிஸ் தொடரின் லீக் போட்டி ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் தலைசிறந்த வீரர்கள் 8 பேர் ஆண்டு இறுதியில் மோதும் ஏடிபி டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டி ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டிய்ல, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு மூன்று என் நேர் செட் கணக்கில் ஜோகோவிச் அபார வெற்றி பெற்றார்.