அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!

329

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கியும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா ஸ்டோசரும் மோதினர். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வோஸ்னியாக்கி அபாரமாக விளையாடினார். இதனால் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்டோசரை எளிதாக வென்று, கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.