சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்வேறு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், கனடாவின் மிலோஸ் ராயோனிக்கை எதிர்கொண்டார். முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் இழந்தார்.

இதையடுத்து சுதாரித்து கொண்ட அவர், அதிரடியாக விளையாடி மூன்றாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் ராயோகிக்கை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அவர் மற்றொரு முன்னணி வீரர் மரின் சிலிக்கை எதிர்கொள்கிறார்.