தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் பீதி!

719

தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில்
நேற்று இரவு 9 மணியளவில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. அச்சன்புதூர், மேக்கரை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை
மற்றும் கேரள மாநிலம் ஆரியங்காவு, தென்மலை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 2 புள்ளி 1 ஆக பதிவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதேநேரம், இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.