கோயில்களில் செயல்பட்டு வரும் கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

409

36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாக கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை உடனடியாக அகற்றுமாறு கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில், பழனி மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்குள் அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி பழனி கோயில் அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து கடை உரிமையாளர்கள் 7 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என தீர்ப்பளித்தார்.