வழிபாட்டு தலங்களில் ஆய்வு : மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

408

நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்களும், 3 லட்சம் மசூதிகளும், ஆயிரக்கணக்கான தேவாலயங்களும் உள்ளன. இத்தகைய வழிபாட்டு தலங்கள் புனிதமானவை என கருதப்பட்டாலும், அவற்றில் பொருளாதார முறைகேடு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மிருனாளிபதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்..

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் நாடு முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி முறைகேடுகளை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் மட்டும் 7 ஆயிரம் கோயில்கள் இருப்பதால் ஆய்வு எந்த முறையில் நடைபெற என வினா எழுப்பிய நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.