ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசால பூஜைகள் தொடக்கம்..!

367

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசால பூஜைகள் தொடங்கின.

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற 16-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று யாகசால பூஜைகள் தொடங்கின. இந்த யாக பூஜைகள் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

விஐபி உள்ளிட்ட தரிசன சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருமலையே வெறிச்சோடி உள்ளது.