ஆந்திர மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் சிவலிங்கத்தின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தலைமை அர்ச்சகராக வெங்கட் ராமராவ் என்பவர் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். பதறிப்போன சக அர்ச்சகர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.