டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளர்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

260

தெலுங்கானாவில் டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளர்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் இருந்து டிராக்டர் மூலம் பெண் தொழிலாளிகள் பணிக்கு சென்றுகொண்டிருந்தனர். வேமுலகொண்டா அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அங்குள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் சென்ற பெண் தொழிலாளர்கள் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.