தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு | மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஆலோசனை.

867

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுடன் பொதுவான அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்ததாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று சென்னை வந்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவரை ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள சந்திசேகரராவை திமுக எம்பி கனிமொழி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், பொதுவான அரசியல் சூழ்நிலை குறித்து கலந்துரையாடியதாக கூறினார்.